தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட முத்து முனியப்பன் கோவில் தெருவில் கிணறு ஒன்று சுற்றுச்சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கிணற்றால் விபத்து ஏற்பட கூடாது என போலீசார் தற்காலிகமாக இந்த பகுதியில் பேரிகார்டு வைத்துள்ளனர். எனவே நிரந்தர தீர்வுகாணும் விதமாக ேபரிகார்டை அகற்றி விட்டு கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.