அடிப்படை வசதி இல்லாத அங்கன்வாடி மையம்

Update: 2024-12-29 16:44 GMT

பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் அடிப்படை அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிய அளவிலான கழிப்பறை வசதி, காற்றோட்டம் இல்லாத சிறிய அறையில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இதனால் குழந்தைகள் அமைதியான சூழலில் கல்வி கற்க முடியவில்லை. எனவே புதிய அங்கன்வாடி மையத்தை விரைந்து கட்டித் தர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பவன், பர்கூர்.

மேலும் செய்திகள்