திருச்சி உலகநாதபுரம், கல்லுக்குழி பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை முட்டுவதற்கு பாய்ந்து ஓடி வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தெருவில் மாடுகள் படுத்து தூங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.