திருச்சி மாநகராட்சி 21-வது வார்டு நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. மேலும் இங்குள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் இவை அந்த பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளிடம் தின்பண்டங்களை பறித்து சென்று விடுகின்றன. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.