ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணி நகர், நேரு நகர் பகுதிகளில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் ஆங்காங்கே படுத்துக்கொள்வதால் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகனங்களின் குறுக்கே நாய்கள் பாய்வதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.