திருவள்ளூர் மாவட்டம் டவுன் 7-வது வார்டில் வீரராகவர் பெருமாள் கல்யாண மண்டபம் உள்ளது. இந்த பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக ஒரு கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்களாக இந்த கழிப்பிடம் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் ஒரு சிலர் சாலை ஓரங்களில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டண கழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.