தூர்ந்து போன மழைநீர் வடிகால்

Update: 2026-03-01 11:08 GMT

பெரம்பலூர் வெங்கடேசபுரம் டயானாநகர் பகுதியில் உள்ள சாலையில் தனியார் பள்ளியின் கிழக்கு பகுதியில் மழைநீர் வடிகால் இருந்தது. மழைக்காலங்களில் இந்த வடிகாலில் தண்ணீர் சென்று பிரதான மழைநீர் வாய்க்காலில் முடியும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மழைநீர் வடிகால் தூர்ந்து போன நிலையில் உள்ளது. எனவே மழைக்காலங்களில் இப்பகுதியில் இருந்து மழைநீர் வெளியேறும் வகையில் தூர்ந்து போன மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்