அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் முத்துசேர்வாமடம் ஊராட்சி கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளில் முக்கியமானது சித்தேரி. இந்த ஏரியில் கடந்த சில வருடங்களாகவே ஒரு சிலர் சுமார் 2 ஏக்கருக்கும் அதிகமான பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி, குளிப்பதற்கு தேவையான இடங்களில் படிக்கட்டுகளை அமைத்து தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.