செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2026-03-01 11:07 GMT

கரூர் மாவட்டம் கவுண்டன்புதூரில் இருந்து தொடங்கி செட்டிதோட்டம், செல்வநகர், முத்தனூர் வழியாக புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரிநீர் கால்வாய் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது. இந்த கால்வாய் வழியாக இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீரும், மழைநீரும் புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உபரிநீர் கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில், கவுண்டன்புதூர் முதல் முத்தனூர் வரையுள்ள உபரிநீர் கால்வாயில் செடி, கொடிகள் மற்றும் சம்புகள் முளைத்துள்ளன. இதனால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உபரிநீர் கால்வாய் மற்றும் குளத்தில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்