புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கடைவீதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இவை இரவு நேரங்களில் சாலையில் படுத்துக் கொள்வதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.