சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினமும் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே இப்பகுதியில் நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும்.