புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி அரசு மருத்துவமனை காம்பவுண்ட் அருகில் ஏராளமான குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் அப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள், ஆடுகள் அதிகளவில் உண்கிறது. இதனால் கால்நடைகளுக்கு செரிமான கோளாராறு ஏற்பட்டு அதிகளவில் பாதிக்கப்படுகிறது. மேலும், இந்த குப்பைகள் காற்றில் பறிந்து சாலையிலும் வந்து விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.