சேதமடைந்த ரெயில்வே மேம்பாலத்தை சரி செய்ய கோரிக்கை

Update: 2024-12-29 11:29 GMT
அரியலூர்-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்தநிலையில் பாலத்தின் மேலே செல்லும் கனரக லாரிகளில் இருந்து மண்கள், ஜல்லிகற்கள் கீழே விழுந்து பாலத்தில் சிதறி கிடக்கிறது. இதனால் பாலத்தில் செல்லும் இருசக்கர வாகனங்கள் ஜல்லிகற்களில் ஏறி இறங்கும்போது விபத்து ஏற்படுகிறது. மேலும் சிலர் இரவு நேரங்களில் பாலத்தில் காலி மதுபாட்டில்களை உடைத்து சென்று விடுகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் பாலத்தின் சிமெண்டு தளம் சேதமடைந்து உடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜல்லிகற்களை அகற்றியும், காலிப்பாட்டில்களை பாலத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி