கூடலூர் நகராட்சி பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று விபத்தில் சிக்க வைக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் தெருக்களில்தான் விடுகின்றனர். இதனால் தெருநாய்கள் தொல்லை தொடர்கிறது. எனவே தெருநாய்களை பிடித்து முழுமையாக கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.