தூர்வாரப்படுமா?

Update: 2024-12-29 08:52 GMT

குலசேகரபுரம் ஊரில் வாயிலாகுளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தை மக்கள் குளிப்பதற்கும், விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளம் முழுவதும் ஆகாய தாமரை மற்றும் செடி-கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி குளத்தில் படர்ந்துள்ள ஆகாயதாமரைகளை அகற்றுவதுடன் தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்