தியாகதுருகம் அருகே மேல்வாழி கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் குளத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் ஏரி, குளத்தில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.