கல்வராயன்மலை அடுத்த வெள்ளிமலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சரிவர திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ்களை பெற முடியாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பூட்டி கிடக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.