புகார்பெட்டி எதிரொலி

Update: 2024-12-22 17:36 GMT
சங்கராபுரம் பூட்டை ரோடு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பயணிகள் நிழற்குடையில் சிலர் குப்பைகளை வீசி வந்தனர். இதனால் அந்த நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்த செய்தி படத்துடன் புகார் பெட்டியில் வெளியானது. இதைத் தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் பயணிகள் நிழற்குடையை சுத்தம் செய்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவிகள் அதிகாாிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தொிவித்தனர்.

மேலும் செய்திகள்