திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.