ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி இல்லை. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். வெளிநோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறையும் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆஸ்பத்திரி கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.