தெருநாய்கள் தொல்லை

Update: 2024-12-22 13:37 GMT

ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் உள்ளது. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. 10, 20 தெருநாய்களுக்கு மேல் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் பெரியவர்கள், குழந்தைகள் தெருவில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் அவர்கள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன்கருதி ெதருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், ஓசூர்.

மேலும் செய்திகள்