திருவள்ளூர் மாவட்டம், மனலி புதுநகர் பால்பூத் அருகே உள்ள பிரதான சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்காணிப்பு கேமரா உள்ள இரும்பு கம்பம் ஆபத்தான முறையில் சாய்ந்து உள்ளது. இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த இரும்பு கம்பத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.