கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அதன் வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். சிலர், தெருநாய்க்கடிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.