சென்னை வியாசர்பாடி, சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தமிழக அரசின் மின்வாரிய பகிர்மான கழகம் மற்றும் வியாசர்பாடி எம்.கே.பி. நகர் மின்வாரிய உதவி பொறியாளர்கள் அலுவலகம் இயங்கி வருகிறது. முதல் மாடியில் வியாசர்பாடி எம்.கே.பி. நகர் உதவி பொறியாளர்கள் அலுவலகம் உள்ளது. இந்த இடத்தில் மின்வாரிய மேற்பார்வையாளர் மற்றும் லைன் மேன் மற்றும் பணியாளர்கள் அமர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த தளத்தின் மேற்கூரையில் இருந்து சில தினங்களுக்கு முன்பு சிமெண்ட் பூச்சு பேர்ந்து விழுந்தது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.