சென்னை அடையாறு, கோவிந்தராஜபுரம் முதல் தெருவில் பட்டுப்போன வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் கீழே தெருக்களில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் செல்லும் மின்பெட்டி உள்ளது. மரத்தின் கிளைகள் அருகில் உள்ள வயர்கள் மீது சாய்ந்து கிடக்கிறது. மழை காலம் என்பதால் மரம் தானாக விழும் அபாய நிலை உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி மாநகராட்சி அதிகாரிகள் மரத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.