நோய் பரவும் அபாயம்

Update: 2024-12-22 10:29 GMT
பொன்னமராவதி ஊராட்சி காரையூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள குடியிருப்புகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தின் அருகே அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேலும் இந்த குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்