வாய்க்கால் பணிகள் முடிவடையுமா?

Update: 2024-12-22 10:24 GMT
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பஸ் நிலையத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வந்தநிலையில், இந்த பகுதியை சில வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்ததால் தற்போது இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்