மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வயதானவர்கள் அவதி

Update: 2024-12-22 10:24 GMT
அரியலூர் மாவட்டம். விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார மையத்தில் தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவம் பணிக்கு கடந்த 6 மாத காலமாக ஆட்கள் இல்லை. இதனால் வீடுகளுக்கு நேரடியாக சென்று மருந்து மாத்திரைகள் கொடுக்கும் பணி தடைபட்டுள்ளது. இதனால் வயதானவர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் இல்லம் தேடி மருத்துவம் பணிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,

மேலும் செய்திகள்

மயான வசதி