பாதசாரிகள் அவதி

Update: 2024-12-22 08:02 GMT

நாகர்கோவில் வடசேரியில் இருந்து மணிமேடை சந்திப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வலதுபுறம் கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து நடைபாதை வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதத்திற்கு முன்பு ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் தூய்மை பணியாளர்கள் சிமெண்டு சிலாப்புகளை அகற்றினர். ஆனால், ஓடையில் அடைப்பு எதுவும் சரிசெய்யப்படவில்லை. மேலும், சிலாப்புகளை சரிசெய்யப்படாமல் ஓடை திறந்து கிடக்கிறது. இதனால், ஓடையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நடந்து செல்லும் பாதசாரிகள் ஓடையில் விழுந்து விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி சிமெண்டு சிலாப்புகள் அமைக்க வேண்டும்.

-குமார், மணிமேடை.

மேலும் செய்திகள்