பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி சிந்தகம்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த கூட்டுறவு வங்கிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் மதுப்பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை அப்பகுதியிலேயே வீசி செல்கின்றனர். மேலும் அலுவலர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதியும் இல்லை. இரவு நேரங்களில் இந்த பகுதி மதுப்பிரியர்களின் கூடாரமாக உள்ளது. எனவே கூட்டுறவு வங்கி அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேணடும்.
-வேந்தன், பர்கூர்.