ஈரோடு அருகே பூந்துறை ரோட்டில் உள்ள வாய்க்கால்மேடு குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் வழியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.