விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகளவு உள்ளது. நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றிதிரிவதோடு போக்குவரத்துக்கு இடையூறையும் ஏற்படுத்துகிறது. இதனால் சில வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?