திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் ஆமூர் ஊராட்சி பகுதியில் மணப்பாளையம் செல்லும் வழியில் ஆமூரிலிருந்து-மனப்பாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.