ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் குறைந்த அளவே டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கிராமப்புறங்களில் இருந்து வருவோர் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கூடுதலாக டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
