அரியலூர் அருகேயுள்ள அம்மாக்குளம் கிராமத்தில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இவை சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் பின்னேயும் குரைத்துக்கொண்டே கடிக்க பாய்கின்றன. இதன்காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்பவதற்கு பயப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.