செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒரத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சிறிய மழை பெய்தாலே இந்த பள்ளி வெளியே மழைநீர் குளம் போல் தேங்கி விடுகிறது. மழை நின்றும் சுமார் 20 நாட்கள் மழைநீர் குட்டைபோல தேங்கி கிடக்கிறது. பள்ளி வரும் மாணவ-மாவணவியர் மற்றும் ஆசிரியர்கள் தேங்கிய மழைநீரை கடந்து வரும் அவல நிலை உள்ளது. இதனால் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், அவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி முன்பு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.