பூட்டி கிடக்கும் கழிவறை

Update: 2024-12-15 12:13 GMT

செங்கல்பட்டு ரெயில் நிலையம் மிகவும் முக்கியமான ரெயில் நிலையமாக உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் ரெயில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் உள்ள கழிவறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பயணிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, ரெயில்வே நிர்வாகம் கழிவறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்