திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஓம் சக்தி கோவில் எதிரே உள்ள சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக செல்கிறது. அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களை முட்டுவதற்கு துரத்துவதால் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாடுகளை பிடித்து சென்று, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.