வேகத்தடை தேவை

Update: 2026-03-01 14:15 GMT

நான்குநேரி- உவரி மெயின் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில் பரப்பாடியில் சாலையோரம் 3 பள்ளிக்கூடங்கள் உள்ளன. அந்த வழியாக அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் ‘என்ட் டூ என்ட்’ பஸ் மோதி அரசு பள்ளி மாணவி படுகாயமடைந்தார். எனவே பள்ளிக்கூடங்கள் அருகில் வேகத்தடைகள் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்