குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி ஓலப்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 30 ஆண்டுகள் வளர்ந்த வேப்பமரத்தை மர்மநபர்கள் வெட்டி துண்டு, துண்டுகளாக எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்தனர். எனவே அரசு பள்ளியில் அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.