மரம் அகற்றப்படுமா?

Update: 2026-03-01 12:42 GMT

வடுகன்பற்று பகுதியில் இருந்து கரும்பாட்டூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து கவர்குளம் ஊருக்கு செல்லும் சாலையோரத்தில் ஒரு மரம் பட்டுப்போன நிலையில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பட்டுப்போன நிலையில் காணப்படும் மரத்தை வெட்டி அகற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்