மின்தகன மேடை சரிசெய்யப்படுமா?

Update: 2024-12-15 11:43 GMT

சென்னை கோடம்பாக்கத்தில் ஏ.வி.எம். மின் தகன மேடை சரியாக பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. மேலும், தகனம் செய்யும் கருவியின் கதவு வேலை செய்யவில்லை. உடலை எரிக்கும் போது வெளிவரும் கரும்புகை செல்வதற்கு ஒரு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் உடைந்து உள்ளதால் உடலை எரிக்கும் போது நச்சு புகை வெளிவருகிறது. இதனால் தகன மேடையில் வேலை செய்யும் ஊழியர்களும், இறந்தவர்களின் உறவினர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனே மின்தகன மேடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்