கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் நிலைய சாலை போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலை ஆகும். இங்கு அம்ருத் குடிநீர் திட்டத்தின் கீழ் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு, மீதமுள்ள குழாய்கள் சாலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக அங்கு வைக்கப்பட்டு உள்ள குழாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.