கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் காலனியில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தின் பல பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. வெளிப்பக்கத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. கழிவறையும், தண்ணீர் வசதியும் இல்லை. இதனால், பெற்றோர்கள் அச்சத்துடனேயே குழந்தைகளை இங்கு அனுப்புகின்றனர். எனவே, குழந்தைகள் நலன்கருதி அங்கன்வாடி கட்டிடத்தை முழுமையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.