மயிலம் அரசு மருத்துவமனையின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து சேதமடைந்த மேற்கூரையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.