அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் அனுப்பூர் ஊராட்சியில் சிவகங்கைபுரம் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓடையாக இருந்தது. ஓடை மூடப்பட்டு தற்போது தார்சாலையாக உள்ளது. பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த மழையால் தண்ணீர் செல்வதற்கு பாதை இல்லாமல் விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் சென்றது. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு பணம், நேர விரயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் விவசாயிகளின் நலன் கருதி சிவகங்கைபுரம் சாலையின் இருபுறமும் தண்ணீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து அந்த தண்ணீர் ஏரியில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கரத்தினம், அனுப்பூர்.