நாமகிரிப்பேட்டை நகர நெடுஞ்சாலையில் சுகாதார நிலையம், போலீஸ் நிலையம் உள்ளன. இதில் சுகாதார நிலையம் முன்பு மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் கொசுக்கள், விஷபூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளன. மேலும் சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள், பொதுமக்களும் அச்சத்துடனேயே வருகின்றனர். இதனால் அதிகாரிகள் மரங்கள் அடர்ந்து காணப்படும் இந்த பகுதியை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெரியசாமி, நாமகிரிப்பேட்டை.