சுகாதார சீர்கேடு

Update: 2024-12-08 16:41 GMT

பாலக்கோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்காததாலும், போதிய தண்ணீர் வசதி இல்லாததாலும் சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியாக செல்பவர்களுக்கும், சார் பதிவாளர் அலுவலகத்திற்கும் வரும் பொதுமக்களும் முகம் சுழிக்கும் வண்ணம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சுகாதார வளாகத்தை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.

-செல்வம், பாலக்கோடு.

மேலும் செய்திகள்