சேதமடைந்த கட்டிடம்

Update: 2024-12-08 14:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் சித்தாற்காடு பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், கனமழையின்போது மழைநீர் சுவர் வழியாக கசிந்து உள்ளே வருகிறது. எனவே, அலுவலகத்தில் பணி செய்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். சிலநேரம் சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து கீழே விழுகிறது. எனவே, விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்