செங்கல்பட்டு மாவட்டம், பெருவேலி பையம்பாடி கிராமத்தில் பாடநூல் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 2021-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. அதன்பின், இதுவரையில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பாடநூல் கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல், அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் இதை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாடநூல் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.